Sunday, June 6, 2010

செம்பருத்தி வண்ணத்திலே வன்முறையின் கவிதையிது

செம்பருத்தி வண்ணத்திலே
செழுமையாக வந்தவளே
கொளுபொம்மை போலவந்து
கொழுகொழு நின்னவளே
எத்தனையோ கவிதைகள
இத்தனைநாள் சொல்லிவந்தேன்
நின்று ஒரு கவிதை சொல்ல
இன்று ஒரு வழியில்லையே
என்று நானும் திகைத்து நிற்க
வண்ணத்தின் வாஸ்தவம் போல்
வன்முறையை கொட்டிவிட்டு
வழக்காடிச்சென்றவளே
வன்முறையின் கவிதையிது தானேடி
இதைவிடவா விஞ்சிவிடபோகிறது
நானெழுதும் ஒரு கவிதை

நெய்தவண்ண பட்டு

நெய்தவண்ண பட்டுடுத்தி
நையப்புடைத்து சென்றவளே
நெய்தவண்ண பட்டிலொரு
நூலாக ஆசையில்லை எனக்கு
உயிரற்ற பொருளாகி
ஆவதென்ன எனக்கு - உன்
முந்தானை நுனியில் மட்டும்
முடிந்துகொண்டால் போதுமடி
முந்நூறு ஆண்டு தவ
முக்தியினை நான்பெறுவேன்

விழித்திரையில் இரவு

பகலெல்லாம் திரட்டியுந்தன்
விழித்திரையிலவன் கொட்டிவைத்தால்
இரவெல்லாம் திரட்டியுந்தன்
விழியிமையில் நீ தீட்டுவதோ
கொட்டியது பகலாக
தீட்டியது இரவாக
வெட்டி வெட்டி துடிக்குமொரு
மாலை வேளையிலே - நான்
மயங்கி நிற்கையிலே
புருவமெனும் வில்லெடுத்து
மன்மத அம்புதனை நீ பாய்ச்ச
மறுபிறவி தானின்றி
மாதவனின் பாதவடி நான் சேர்வேன்