Sunday, June 6, 2010

செம்பருத்தி வண்ணத்திலே வன்முறையின் கவிதையிது

செம்பருத்தி வண்ணத்திலே
செழுமையாக வந்தவளே
கொளுபொம்மை போலவந்து
கொழுகொழு நின்னவளே
எத்தனையோ கவிதைகள
இத்தனைநாள் சொல்லிவந்தேன்
நின்று ஒரு கவிதை சொல்ல
இன்று ஒரு வழியில்லையே
என்று நானும் திகைத்து நிற்க
வண்ணத்தின் வாஸ்தவம் போல்
வன்முறையை கொட்டிவிட்டு
வழக்காடிச்சென்றவளே
வன்முறையின் கவிதையிது தானேடி
இதைவிடவா விஞ்சிவிடபோகிறது
நானெழுதும் ஒரு கவிதை

நெய்தவண்ண பட்டு

நெய்தவண்ண பட்டுடுத்தி
நையப்புடைத்து சென்றவளே
நெய்தவண்ண பட்டிலொரு
நூலாக ஆசையில்லை எனக்கு
உயிரற்ற பொருளாகி
ஆவதென்ன எனக்கு - உன்
முந்தானை நுனியில் மட்டும்
முடிந்துகொண்டால் போதுமடி
முந்நூறு ஆண்டு தவ
முக்தியினை நான்பெறுவேன்

விழித்திரையில் இரவு

பகலெல்லாம் திரட்டியுந்தன்
விழித்திரையிலவன் கொட்டிவைத்தால்
இரவெல்லாம் திரட்டியுந்தன்
விழியிமையில் நீ தீட்டுவதோ
கொட்டியது பகலாக
தீட்டியது இரவாக
வெட்டி வெட்டி துடிக்குமொரு
மாலை வேளையிலே - நான்
மயங்கி நிற்கையிலே
புருவமெனும் வில்லெடுத்து
மன்மத அம்புதனை நீ பாய்ச்ச
மறுபிறவி தானின்றி
மாதவனின் பாதவடி நான் சேர்வேன்

Saturday, March 20, 2010

நண்பனின் நிமிட படைப்புக்கள்

மொட்டு விட்ட
பட்டு ரோஜா - கன்னம் பார்த்து
எட்டி ஓடும்
போட்டி இல்லை நானுனக்கு
என்று சொல்லி
தண்டனிட்டு தண்டனிட்டு
பாதம் சேரும் .


கன்னத்து அழகு சொல்லி
கவிதையொன்று பரிசு தந்தேன்
கண்ணிமைக்கும் நேரத்தில்
கைகொடுத்து நன்றேன்றாய்
குலுகியதுன் கைகளானாலும்
நொறுங்கியதேன் நெஞ்சமன்றோ
எத்தனையோ கவிதை சொல்லி
எவனெவனோ பாராட்ட
நீ சொன்ன ஒரு வார்த்தை
என் நெஞ்சை சீராட்ட
முதன் முதலாய் எனைதொட்ட
ஒரு பெண்ணும் நீதானே
முத்துமுத்தாய் நான் கவிதை
வடிதிடுவேன் இனிதானே .


(விண்ணை தாண்டி வருவாயா (அந்த நேரம் அந்தி நேரம் பாடல் ))

சென்றவாரம் இந்த நேரம்
என்பக்கம் நீ வந்து
சொக்கா அது பக்கா என்றாய்
இந்தவாரம் நீயும் வந்து
நீ தந்த கவிதைக்கு
இந்தா என் பரிசு என்றாய்
ஏதேதோ ஆகுதே
என்னுள்ளம் நோகுதே
இதை என்றென்று நான் சொல்ல
என்னுள்ளம் தீபந்தம் கொழுந்துவிட்டு எரிகின்றதே .


விண்மீன்கள் கூட்டத்தை காணவில்லை - அதை
வீட்டிற்குள் ஒளிதீருபாஎன்று தோணவில்லை
விடிந்தால் நீவந்தாயே தேவதையாய்
விண்மீன்கள் கூட்டமது காதணியாய் .


எதிர்பாராத ஒன்று
இரண்டு நாள் சென்று
தருவேன் நான் என்று
சொன்னால் நீ நன்று
அது என்ன என்று
என் மதியை தின்று
நிம்மதியை கொன்று
யோசிப்பேன் என்று
நினைத்தை நீ என்று
எதை நீதான் கொடுத்தாலும்
என்னுயிரை எடுத்தாலும்
எனை ஆளும் ஒருஜீவன்
நீதானே நீதானே நீதானே .

இரவினிலே
மேலிமையாய் நீஇருந்தாய்
கீழிமையாய் நானிருந்தேன்
இறங்கிவர இரக்கமில்லை உனக்கு
ஏக்கம் வந்து தூக்கமில்லை எனக்கு
இடையினிலே
வெண்ணிலவில் பொட்டு வைத்த என் கண்கள் - ஆனதடி
செம்புலத்தில் நட்டு வைத்த இரு காந்தள்.